வேதகிரீஸ்வரர் கோவிலில் கால்கோல் விழா
ADDED :4348 days ago
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், சித்திரைத் திருவிழாவிற்கு கால்கோல் விழா நேற்று நடைபெற்றது. திருக்கழுக்குன்றத்தில், பிரசித்தி பெற்ற வேதகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும், சித்திரைத் திருவிழா, 11 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கடந்த 2011 முதல் 2013 வரை கோவில் திருப்பணிகள் நடைபெற்றதால், கடந்த மூன்று ஆண்டுகளாக, திருவிழா நடைபெறவில்லை. கடந்த செப்டம்பர் மாதம் கும்பாபிஷேகம் நடை பெற்றது. அதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு சித்திரை மாதத்தில், திருவிழா நடத்த, இந்து சமய அற நிலையத் துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.
அதன்படி, நேற்று கோவிலில், கால்கோல் விழா நடைபெற்றது. விழாவில், கோவில் செயல் அலுவலர் வீருபொம்மு மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.