உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்தலசயனப்பெருமாள் கோவில் தீர்த்த கிணறு புதுப்பிக்க பூஜை

ஸ்தலசயனப்பெருமாள் கோவில் தீர்த்த கிணறு புதுப்பிக்க பூஜை

மாமல்லபுரம்: காஞ்சிபுரம் மமாவட்டம், மாமல்லபுரம் ஸ்தலசயனப் பெருமாள் கோவில் தீர்த்த கிணறு தூர்வாரி புதுப்பிக்கப்படுகிறது.மாமல்லபுரம் ஸ்தலசயனப்பெருமாள் கோவில், 108 வைணவ திருத்தலங்களில், 63வது திருத்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலின் தீர்த்த கிணறு, பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி சீரழிந்து வந்தது.இதுகுறித்து, கடந்த ஜனவரி மாதம் "தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.இதையடுத்து, கிணறை தூர்வாரி புதுப்பிக்குமாறு, தனியார் நிறுவனத்திடம் கோவில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்தது. இதை பரிசீலித்த நிறுவனம், தூர்வாரி ஆழப்படுத்தி மோட்டார் பொருத்தவும், பாதுகாப்பிற்கு இரும்பு கம்பி தடுப்பு அமைக்கவும் ஒப்புக் கொண்டது. கிணறை தூர்வாரும் பணி, நேற்று காலை பூமிபூஜையுடன் பணியை துவக்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !