உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரைகண்டநாதர் கோவில் கும்பாபிஷேகம்

கரைகண்டநாதர் கோவில் கும்பாபிஷேகம்

கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்டம், ஏனாதிமேல்பாக்கம், விஜயாம்பிகை உடனுறை கரைகண்டநாதர் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி அருகே, ஏனாதிமேல்பாக்கம் கிராமத்தில் உள்ளது விஜயாம்பிகை உடனுறை கரைகண்டநாதர் கோவில். நேற்று, அந்த கோவிலில், கும்பாபிஷேக விழா நடந்தது. யாக சாலையில் வைத்து, பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்டு, கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து கரைகண்டநாதர், விஜயாம்பிகை மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. ஏனாதிமேல்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த, நூற்றுக்கணக்கான மக்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு, இறைவனை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !