உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

நகரி: நகரி அருகே, செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம், நேற்று நடைபெற்றது.சித்தூர் மாவட்டம், நகரி நகராட்சி பகுதியில், சிந்தலப்பட்டடை குயவர் தெருவில், புதியதாக கட்டப்பட்ட செல்வ விநாயகர் கோவிலின் மகா கும்பாபிஷேகம், நேற்று காலை 7:00 மணிக்கு நடந்தது.கோவில் விமான கோபுரம், மூலவர் சன்னிதியில், புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், சுற்று வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அங்காள பரமேஸ்வரி கோவில்: நகரி அடுத்த, புதுப்பேட்டை அருகில் உள்ள பீமாநகர் அங்காளபரமேஸ்வரி எல்லம்மாள் கோவிலிலும் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.

 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !