உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்திராதி மடத்தின் பீடாதிபதி நாளை ஸ்ரீமுஷ்ணம் வருகை!

உத்திராதி மடத்தின் பீடாதிபதி நாளை ஸ்ரீமுஷ்ணம் வருகை!

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணத்திற்கு கர்நாடக மாநில உத்திராதி மடத்தின் பீடாதிபதி நாளை  பூவராகசுவாமி கோவிலுக்கு வருகை தருகிறார். கர்நாடக  மாநிலம் பெங்களுரில் உள்ள உத்திராதி மடத்தின் பீடாதிபதி சத்யாத்ம தீர்த்த சுவாமிகள் இன்று இரவு ஸ்ரீமுஷ்ணத்திற்கு வருகை தருகிறார். தொடர்ந்து நாளை (5ம் @ததி) காலை பூவராக சுவாமி கோவிலில்  சுவாமி தரிசனம் செய்த பின்னர் உத்திராதி மடத்தில் பாதபூஜை, முத்திராராதனை செய்கிறார். தொடர்ந்து விருத்தாசலம் சாலையில் உள்ள தண்டதீர்த்தம் திருக்குளத்தில் மகா பூஜைகள் நடந்து தீர்த்த பிரசாதம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை ஸ்ரீமுஷ்ணம் உத்திராதி மடத்தின் மேலாளர் பூவராகமூர்த்திராவ் மற்றும் பலர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !