உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெள்ளிக் கவசத்தில் பண்ருட்டி அங்காளம்மன் அருள்பாலிப்பு!

வெள்ளிக் கவசத்தில் பண்ருட்டி அங்காளம்மன் அருள்பாலிப்பு!

பண்ருட்டி: பண்ருட்டி அங்காளம்மன் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு வெள்ளிக் கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடந்த 26ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 27ம்தேதி  காலை அபிஷேகம், மாலை இருளமுகத்துடன் பூவாலக்கப்பரை வீதியுலாவும், 28ம்தேதி அம்மனுக்கு அபிஷேகம்,  ரணகளிப்பு, வீதியுலா நடந்தது. நேற்றுமுன்தினம் 1ம்தேதி காலை அம்மனுக்கு அபிஷேகம், 1:30 மணிக்கு மயானக்கொள்ளை, வீதியுலா நடந்தது. நேற்று  2ம் தேதி காலை அபிஷேகத்தை தொடர்ந்து மூலவர் அங்காளம்மனுக்கு  வெள்ளிக்கவசம்  அணிவித்து தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், இன்று 3ம்தேதி காலை அபிஷேகம், மாலை மஞ்சள் நீராட்டுவிழாவும், நாளை  4ம்தேதி மாலை சாகைவார்த்தல் நிகழ்ச்சியும், இரவு 8:00 மணிக்கு கும்பம் போடுதல் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !