திருவாரூர் மகாகாளியம்மன் கோவிலில் கப்பரை திருவிழா!
ADDED :4251 days ago
திருவாரூர்: திருவாரூர் நேதாஜி சாலை மகாகாளியம்மன் கோவிலில் நேற்று மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு அக்கினி கப்பரை புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். திருவாரூர் நேதாஜி சாலையில் மகாகாளியம்மன் கோவில் <உள்ளது. இக் கோவில் ஆண்டுதோறும் மகாசிவராத்தி விழா வைத்தொடர்ந்து அக்கினி கப்பறை விழா நடந்தது. முன்னதாக வினாயகர், காளியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரமும், கரகம், காளி, காட்டேரி திருநடனம் நடந்தது. இரண்டாம் நாள் விழாவாக அக்னி கப்பரை புறப்பாடும் அம்பாள் வீதியுலா காட்சியும் நடந்தது. இதில் சுற்றுப்பகுதியினர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை சங்கர் உள்ளிட்ட விழாக்குழு வினர்கள் செய்திருந்தனர்.