திருச்செந்தூரில் அய்யா வைகுண்டர் அவதார தின விழா
ADDED :4251 days ago
திருச்செந்தூர்: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் கடற்கரையில் உள்ள அய்யா வைகுண்டர் 182-வது அவதார தின விழா இன்று காலை நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு தாலாட்டு, பள்ளி உணர்த்தல் அபயம் பாடுதல் நிகழ்ச்சியும், காலை 6.30 மணிக்கு சூரிய உதயத்தில் கடல் பதமிடுதலும், அவதார பணிவிடையும் நடைபெற்றது. இந்த விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டனர்.