பச்சனம்பட்டி மாரியம்மன் கோவிலில் தீ மிதி விழா
ADDED :4345 days ago
ஓமலூர்: ஓமலூர் அருகே உள்ள பச்சனம்பட்டி மாரியம்மன் கோவிலில், இன்று தீ மிதி விழா நடக்கிறது. ஓமலூர் அருகே உள்ள பச்சனம்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று ஸ்வாமி அழைப்புடன் துவங்கியது. இன்று காலை, சக்தி கரகம் எடுக்கும் நிகழ்ச்சியும், பொங்கல் வைத்தலும் நடக்கிறது. இன்று மாலை, 6.30 மணிக்கு தீ மிதி விழா நடக்கிறது. இரவு, 8.00 மணிக்கு, கிராமிய கலை நிகழ்ச்சியும், 6ம் தேதி மாலை, வண்டி வேடிக்கையும், 7ம் தேதி இரவு, வாண வேடிக்கையும், 8ம் தேதி, அம்மன் ஊர்வலமும் நடக்கிறது.