உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில் விழாவில் கத்திபோடும் நிகழ்ச்சி

கோவில் விழாவில் கத்திபோடும் நிகழ்ச்சி

பந்தலூர்: பந்தலூர் அருகே உப்பட்டியில் நடந்த கோவில் திருவிழாவில் கத்திபோடும் நிகழ்ச்சி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. உப்பட்டி ஹட்டியில் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா 2ம்தேதி காலை 6:00 மணிக்கு மகா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து கொடியேற்றுதல், பண்ணாரம் எடுத்தல், தீபாராதனை, பூஜைககள் நடந்தது. 3ம்தேதி காலை 5:00 மணிக்கு அபிஷேக ஆராதனைகளும், 10:00 மணிக்கு கங்கை பூஜையுடன் கத்திபோடும் நிகழ்ச்சியும், தொடர்ந்து அன்னதான நிகழ்ச்சியும் நடந்தது. மாலை 3:00 மணிக்கு கங்கை சாமுண்டியை சன்னதியிலிருந்து வழியனுப்புதல் மற்றும் கத்திபோடும் நிகழ்ச்சி செண்டை மற்றும் பழங்குடியினர் இசைகருவிகள் இசைத்தல் நிகழ்ச்சியுடன் நடந்தது. மாலை 6:00 மணிக்கு சிறப்பு பூஜைகளும், 9:00 மணிக்கு தாயம்பகா, செண்டைமேள நிகழ்ச்சியும், 4ம்தேதி காலை 5:00 மணிக்கு மஞ்சள் நீராட்டத்துடன் விழா நிறைவு பெற்றது. திருவிழா நிகழ்ச்சியில் கத்திபோடும் நிகழ்ச்சி பக்தர்களை மட்டுமின்றி பார்வையாளர்களையும் மெய்சிலிர்க்க வைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !