உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னை சிவன் கோவில்களில் பங்குனி பெருவிழா!

சென்னை சிவன் கோவில்களில் பங்குனி பெருவிழா!

சென்னை: சென்னை, மண்ணடி, பாரிமுனை, மேற்கு மாம்பலத்தில் உள்ள சிவன் கோவில்களில், பங்குனி உத்திர பெருவிழா இன்று மாலை முதல் துவங்க உள்ளது. வடசென்னையில் மண்ணடி, லிங்கிச் செட்டித் தெருவில் உள்ள மரகதம்பாள் சமேத மல்லீகேஸ்வரர் கோவிலில், வரும், 23ம் தேதி வரை பங்குனி பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது. இன்று மாலை, விநாயகர் உற்சவமும், நாளை காலை கொடியேற்றமும் நடக்கிறது. தொடர்ந்து, 9ம் தேதி, அதிகார நந்தி சேவையும், அதைத் தொடர்ந்து பல்வேறு வாகன புறப்பாடும் நடக்கிறது. வரும், 13ம் தேதி காலை, ரத உற்சவம் நடக்கிறது. 16ம் தேதி மாலை, ஸ்ரீநடராஜர் உற்சவமும், இரவு திருக்கல்யாணமும் நடக்கிறது. 29ம் தேதி, ஏகாந்த சேவையுடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது. பாரிமுனை சென்ன மல்லீஸ்வரர் கோவிலில், நாளை காலை கொடியேற்றமும், 9ம் தேதி நந்தி சேவையும், 11ம்தேதி வெள்ளி ரிஷப வாகன புறப்பாடு மற்றும் பஞ்சமூர்த்தி புறப்பாடும் நடக்கிறது. 13ம் தேர் புறப்பாடும், 16ம் தேதி திருக்கல்யாணமும் நடக்கிறது. 19ம் தேதி பங்குனி உத்திர விழா நிறைவு பெற்றதும், 20 முதல், 23ம் தேதி விடையாற்றி உற்சவம் நடக்கிறது. 23ம் தேதி திருநடன உற்சவம் நடக்கவுள்ளது. மேற்கு மாம்பலம், காசி விஸ்வநாதர் கோவிலிலும் நாளை காலை கொடியேற்றத்துடன், பங்குனிப் பெருவிழா துவங்க உள்ளது. வரும் 9ம் தேதிகாலை, 7:30 மணிக்கு அதிகார நந்தி சேவை, 13ம் தேதி காலை, 6:00 மணிக்கு தேரோட்டமும் நடைபெற உள்ளது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !