ஷீரடி சாய்பாபா கோவிலில் பிரார்த்தனை கூடம் திறப்பு!
நெய்வேலி: நெய்வேலி ஷீரடி சாய்பாபா கோவில் வளாகத்தில் புதிய பிரார்த்தனை கூடம் திறப்பு விழா நடந்தது. நெய்வேலி நகரம் வட்டம் 27ல் ஷீரடி சாய்பாபா கோவில் வளாகத்தில் ஷீரடி சாய் சேவா சமிதி அறக்கட்டளை சார்பில் புதிய பிரார்த்தனை கூடம் கட்டப்பட்டுள்ளது. மேலும், கைலாய மலையில் (மானசரோவர்) தானே உருவான சுயம்பு லிங்கம் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு நெய்வேலிக்கு பிரத்யோகமாக கொண்டுவரப்பட்டிருந்தது.புதிய பிரார்த்தனை கூடத்தை சாய் சமிதி அறக்கட்டளை புரவலர் ஸ்வர்ணக்குமாரி சுரேந்தர் மோகன் திறந்து வைத்தார். தொடர்ந்து கைலாய மலையிலிருந்து கொண்டு வரப்பட்ட சுயம்புலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில், சாய் சமிதியின் அறக்கட்டளைத் தலைவி ராஜேஸ்வரி, செயலர் துவிபாலா அருண்குமார், பொருளா ளர் சந்திரசேகர், என்.எல்.சி., சேர்மன் செயலர் அசோகன் மற்றும் சமிதி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.