உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உண்மையான பக்தி இருந்தால், உயர்ந்த நிலையை அடையலாம்!

உண்மையான பக்தி இருந்தால், உயர்ந்த நிலையை அடையலாம்!

திருப்பூர்: உண்மையான பக்தியுடன், இறைவனின் நாமத்தை சொன்னால், வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடையலாம், என, சொற்பொழிவாளர் முரளீதர சுவாமிகள் பேசினார். ஸ்ரீமத் பாகவதம் சொற்பொழிவு, திருப்பூர் கொங்கு வேளாளர் மெட்ரிக் பள்ளியில் நடந்து வருகிறது. சொற்பொழிவாளர் முரளீதர சுவாமிகள் பேசியதாவது: திருமங்கையாழ்வர் என்ற பக்தர், வழிப்பறி செய்வார்; பணம், நகைகளை திருடுவார். அந்த பணத்தில், அடியவர்

களுக்கு அன்னதானம் செய்வார். கர்ணன் சொர்க்கத்துக்கு சென்றபோது, அங்கிருந்தவர்களுக்கு பசிக்கவில்லை. கர்ணனுக்கு பசித்தது. கிருஷ்ணர் அங்கு வந்தபோது, இதுபற்றி கர்ணன் கேட்டார். அதற்கு கிருஷ்ணர், "எல்லா தானதர்மம் செய்தாலும், நீ அன்னதானம் செய்யவில்லை; அதனால், பசிக்கிறது, என்றார். காசு, பணம் கொடுத்து ஒருவனை திருப்திப்படுத்த முடியாது. பசித்தவனுக்கு அன்னமிட்டால், அவன் திருப்தியடைவான். அன்னம் கொடுத்தவன், உயிர் கொடுத்தவனாகிறான். "நாராயண என்ற சொல்லில் இருந்து "ராவையும், "நமசிவாய என்ற சொல்லில் இருந்து "ம என்ற எழுத்துகளை எடுத்து "ராம நாமம் சொன்னால், சிவன், விஷ்ணு இருவரையும் வழிபட்ட பலன் கிடைக்கிறது. ராம நாமம் என நாம கீர்த்தனம் செய்பவர்களுக்கு எல்லாம் கிடைக்கும் என மகான்கள் கூறுகின்றனர். "காற்றுள்ள போதே தூற்றிக்கொள், என்றால், பிராணன் என்ற உயிர்காற்று உள்ளபோது, உயிரோடு இருக்கும்போதே இறைவனை துதித்துக் கொள்ள வேண்டும் என அர்த்தம். ஒருவன் இறந்தால், அவனது சொத்து, வீடு, உறவு உடன் வராது; அவன் செய்த தானமும், தர்மமும் கூட வரும். அதையே, "தனக்கு மிஞ்சியது தானமும் தர்மம், என்றனர். இதை, தனக்கு வைத்துக்கொண்டு மிஞ்சியதை

பிறருக்கு தானம், தர்மம் செய்வது என தவறாக நினைக்கின்றனர். தவறு செய்தவன் இறைவனிடம், "இனி தவறு செய்ய மாட்டேன், காப்பாற்று என, வேண்டுகிறான். இறைவன் காப்பாற்றி விட்டால், இது தானாக நடந்ததா, இறைவன் காப்பாற்றினாரா என சந்தேகப்படுகிறான். மீண்டும் தவறு செய்கிறான். ஒரு தவறுக்கு பிராயசித்தம் தேடும் முன் அடுத்த தவறை செய்கிறான். மகன், முட்டாளாய் இருந்தால், தந்தைக்கு அவமானம். தன்னுடைய பக்தன், கெட்ட

வனாக இருக்க இறைவன் விட மாட்டான். உண்மையான பக்தியுடன் இறைவனை வழிபட்டால், அவன் தவறுக்கு பிராயசித்தமும் கிடைக்கும். மீண்டும் தவறு செய்யாதவாறு, இறைவன், அவனை வழிநடத்திச் செல் வான். உண்மையான பக்தியுடன் இறைவன் நாமம் சொன்னால், உயர்ந்த நிலையை அடையலாம். இவ்வாறு, முரளீதர சுவாமிகள் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !