உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏழுமலையானை தரிசிக்க 22 மணி நேரம் பக்தர்கள் காத்திருப்பு!

ஏழுமலையானை தரிசிக்க 22 மணி நேரம் பக்தர்கள் காத்திருப்பு!

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க, ஞாயிற்றுக்கிழமை, பக்தர்கள், 22 மணி நேரம் காத்திருந்தனர். திருமலை ஏழுமலையானை தரிசிக்க, அரசு தேர்வுகள் நடைபெறும் சமயத்திலும், பக்தர்கள் அதிக அளவில் வரத் துவங்கியுள்ளனர் என்பது நேற்று தெரிய வந்தது. பக்தர்கள் கூட்டம், அதிகரிப்பால், திருமலை ஏழுமலையானை தரிசிக்க, தர்ம தரிசனத்தில், 22 மணி நேரமும், நடை பாதை பக்தர்கள் தரிசனத்திற்கு, 12 மணிநேரமும், 300 ரூபாய் விரைவு தரிசன பக்தர்கள், ஏழு மணி நேரமும் காத்திருந்தனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, 3:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை, 48 ஆயிரம் பக்தர்களும், சனிக்கிழமை முழுவதும், 69 ஆயிரம் பக்தர்களும், ஏழுமலையானை தரிசித்தனர். ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி, தர்ம தரிசன பக்தர்கள், 31 காத்திருப்பு அறைகளை கடந்து, 2 கி.மீ., தொலைவிலும், பாத யாத்திரை பக்தர்கள், 15 காத்திருப்பு அறைகளை கடந்து, 1 கி.மீ., தொலைவிலும், 300 ரூபாய், விரைவு தரிசன பக்தர்கள், 10 காத்திருப்பு அறைகளை கடந்து, அரை கி.மீ., தூரம், ஏழுமலையானை தரிசிக்க காத்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !