தீர்த்தனகிரி அங்காளபரமேஸ்வரி கோவிலில் மயானக் கொள்ளை!
ADDED :4396 days ago
புதுச்சத்திரம்: தீர்த்தனகிரி அங்காளபரமேஸ்வரி கோவிலில் 66 வது ஆண்டு மயானக் கொள்ளை திருவிழா நடந்தது. புதுச்சத்திரம் அடுத்த தீர்த்தனகிரி அங்காளபரமேஸ்வரி கோவிலில் 66ம் ஆண்டு மயானக்கொள்ளை திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இதற்கான விழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினசரி இரவில் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் வீதியுலா நடைபெற்றது. நேற்று முன்தினம் அம்மன் காளி வேடத்தில் ”டுகாட்டிற்கு சென்ற மயானக்கொள்ளை உற்சவம் நடந்தது.