மல்லிகார்ஜூன ஸ்வாமி கோவிலில் குங்கும திருநாள் பேரானந்த விழா!
ADDED :4263 days ago
தர்மபுரி: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு குங்கும திருநாள் பேரானந்த திருவிழா நடந்தது. தர்மபுரி கோட்டை கல்யாண காமாட்சி உடனாகிய மல்லிகார்ஜூன ஸ்வாமி கோவிலில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, குங்கும திருநாள் பேரானந்த திருவிழா நடந்தது. இதனை முன்னிட்டு, சவுபாக்ய துர்கா லட்சுமி ஹோமம் மற்றும் மாலை, 4.30 மணி முதல், 5.45 மணி வரை, பதினெட்டாம்படி திருவடி பூஜைகள் நடந்தது.சபரி மலையை போன்றே தர்மபுரி கல்யாண காமாட்சி கோவிலில் உள்ள பதினெட்டு படிகளை பெண்கள் மட்டுமே, பூஜித்து வழிபட்டனர். இதனையடுத்து, அம்மனை பெண்கள் மட்டும் சுமந்து கோவிலை உலா வந்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, செயல்அலுவலர் அமுதசுரபி, கோவில் குருக்கள் முத்துகுமாரசாமி ஆகியோர் செய்திருந்தனர்.