உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவிலை தூய்மை செய்த மாணவர்கள்!

கோவிலை தூய்மை செய்த மாணவர்கள்!

ஆத்தூர்: ஆத்தூர் அருகே ஜூனியர் ரெட் கிராஸ் மாணவ, மாணவியர், கோவிலை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.ஆத்தூர் அருகே மஞ்சினியில், பிரசித்தி பெற்ற புத்துக்கண் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் ராஜகோபுரம், சுற்றுப்புற வளாகத்தை, மஞ்சினி மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த, ஜூனியர் ரெட் கிராஸ் மாணவ, மாணவியர் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.பின்னர், ப்ளஸ் 2, எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர், அதிக மதிப்பெண் பெற, ஸ்வாமிக்கு சிறப்பு பூஜை செய்தனர்.தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், உதவி தலைமை ஆசிரியர் கண்ணன், ஜூனியர் ரெட்கிராஸ் ஆசிரியர் விக்ரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !