உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரூர் கோவில் மணி பெல்லில் புதுப்பிப்பு

கரூர் கோவில் மணி பெல்லில் புதுப்பிப்பு

திருச்சி: திருச்சி பெல்லில், 400 கிலோ எடை கொண்ட, கரூர் கோவில் மணி புதுப்பிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது. திருச்சி பெல் நிறுவனத்தில் உள்ள பற்றவைக்கும் ஆராய்ச்சி மையம், கரூர் பசுபதீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான, 400 கிலோ எடை கொண்ட கோவில் மணி புதுப்பிக்கும் பணியை மேற்கொண்டது. மணி, 1,000 மி.மீ., உயரமும், 40 மி.மீ., தடிமனும் கொண்டதாகும்.பித்தளையால் தயாரிக்கப்பட்ட இந்த மணியில் சமீபத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது. இதை சரி செய்வதற்காக பெல்லில் எரி உலை வடிவமைக்கப்பட்டு கட்டுப்பாடான வெப்ப நிலையில் பற்றவைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இதை புதுப்பிக்கும் பணி வெற்றிகரமாக முடிந்தது.பெல் பொது மேலாளர்கள் வாசுதேவன், ஈஸ்வரன், ரமேஷ், சுந்தரராஜன், கண்ணன், கூடுதல் பொது மேலாளர் மதியண்ணல் ஆகியோர் முன்னிலையில், கோவில் அர்ச்சகர் பஞ்சாபகேச குருக்கள் புதுப்பிக்கட்ட மணிக்கு சிறப்பு பூஜை செய்தார்.பின்னர் பெல் செயல் இயக்குனர் கிருஷ்ணன் புதுப்பிக்கப்பட்ட மணியை கோவில் நிர்வாகிகளிடம் நேற்று முன்தினம் வழங்கினார்.இது வரை, திருச்சி மலைக்கோட்டை உள்பட, தமிழகத்தில் உள்ள, 46 கோவில் மணியை திருச்சி பெல் நிறுவனம் சீரமைப்பு கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !