உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நன்னிலத்தில் அங்காளம்மன் கோவில் கட்டும்பணி துவக்கம்!

நன்னிலத்தில் அங்காளம்மன் கோவில் கட்டும்பணி துவக்கம்!

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே தென்குடியில் புற்று வடிவில் தோன்றிய அங்காளம்மன் கோவில் கட்டும்பணி துவங்கியுள்ளதால் பக்தர் களின் நன் கொடையை எதிர்பார்த்துள்ளனர். மயிலாடுதுறை அருகே திருவாலபுத்தூர் குக்கிராமத்தை சேர்ந்தவர் அப்பு வர்மன்(42), ஸ்பதியான இவர் சிறுவயதில் சென்னை மடிப்பாக்கத்தில் தங்கி சுதை வேலை செய்து வருகிறார். இவர் மனைவி காயத்திரி அங்குள்ள தனி யார் பள்ளியில் ஆயா வாக பணியாற்றி வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்  காயத்திரி கனவில் தோன்றிய அங் காளம்மன், திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே தென்குடியில் திரும லைராஜன் ஆற்றின் மேற்பகுதியில் புற்று வடிவில் கோவில் கொண் டிருப்ப தாகவும், அங்கு கோவில் கட்டி வழிபாடு செய்ய வேண்டும் என கூறி மறைந்துள்ளார்.  இச்சம்பவத்தை காயத்திரி, தன் கணவர் மற்றும் மாமியாரிடம் தெரி வித் தார். அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்தனர். இச்சம்வம் தொடர்ந்து அவர் கனவில் வந்ததால், காயத்திரி உடல் நலக்குறை ஏற்பட்டு பல்வேறு டாக் டரிடம் காண்பித்தும் குணமடைய வில்லை.

இந்நிலையில் கடந்த ஆண்டு மீண்டும் கனவில் இதே வார்த்தையும், அசரரீ யாக தோன்றியதால் அவர் நள்ளிரவில் அலறியடித்துக் கொண்டு வழித் தெரி யாமல் அவர் கனவில் தோன்றிய திருவாரூர் மாவட்டத்திற்கு வந்து குறிப்பிட்ட இடத்தில் படுத்துக் கொண்டார். மூன்று தினங்கள் ஆகாரம் இல்லாமல்  வேப்பிலையை மட்டும் தின்றுக் கொண்டே தங்கினார். அதன் பின் அவர் உறவினர்கள் நேரில் வந்து அவரின் செயலை கண்டு திடு க்கிட்டனர். அதன் பின் காடுகளை அகற்றி விட்டு கொட்டகை அமைத்து வழிபாடு நடத்திய நிலையில் அவர் குணம் அடைந்தார். அப்பகுதியை சேர்ந்த வர்கள் குறிப்பிட்ட இடத்தை கொடுத்தனர். தற்போது அங்கு கொட் டகை அமைத்து, அங்காளம்மன், பேச்சியம்மன்,வினாயகர், மூன்று லிங்கம், முருகன், பாவாடைராயன், சப்த கன்னிகள் வைத்து வழிபாடு நடத்தி வருகிறார். மேலும் காயத்திரி வேப்பிலையை தின்று கொண்டு பக்தர்களின் கோரிக் கைகளுக்கு அருள் வாக்கு அளித்து வருகிறார்.இங்கு வருபவர்கள் புத்தி ரபாக்கியம், திருமணத் தடையும் நீங்கி வருவதால் பக்தர்கள் ஞாயிறு தோ றும் அதிகளவில் வந்து செல்கின்றனர். தற்போது பக்தர்களின் உதவியுடன்  பல்வேறு விக்ரங்கள் அமைத்து புதிய கோவில் கட்டும்பணி துவங் கியுள்ளது. பக்தர்கள் தங்கள் நன் கொடையை வழங்க 98409-61633,99415-00153 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !