செம்பை சங்கீத உற்சவத்தில் மகதி!
ADDED :4259 days ago
பாலக்காடு: செம்பை பார்த்தசாரதி கோவில் ஏகாதசி திருவிழாவின் மூன்றாம் நாளான நேற்று, முன்னணி கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. செம்பை சங்கீத உற்சவத்தின் இரண்டாம் நாளான நேற்று மாலை 6.00 மணிக்கு மகதியின் இசை நிகழ்ச்சி நடந்தது. திருவனந்தபுரம் சம்பத் வயலின், பத்திரி சதீஷ் மிருதங்கம், ஸ்ரீஜித் கடம் வாசித்தனர். தொடர்ந்து, சிக்கில் குருசரனின் சங்கீத கச்சேரி நடந்தது. மூன்றாம் நாளான இன்று (11ம் தேதி) காலை 9.30 மணிக்கு, கடையநல்லூர் ராஜகோபால பாகவதர் தலைமையிலான ராதா கல்யாணோற்சவம் நடக்கிறது. மாலை 5.30க்கு நித்யஸ்ரீ மகாதேவன், 7.00 மணிக்கு டாக்டர் ஸ்ரீவத்சன் ஜெ.மேனன் ஆகியோரின் சங்கீத ஆராதனை நடக்கிறது.