உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரளயநாதர் சுவாமி கோயில் வருடாபிஷேக விழா

பிரளயநாதர் சுவாமி கோயில் வருடாபிஷேக விழா

சோழவந்தான்,: சோழவந்தான் வைகை கரையில் அமைந்த பிரளயநாதர்சுவாமி கோயிலில் எழுந்தருளியுள்ள சனீஸ்வரலிங்கத்திற்கு வருடாபிஷேகவிழா நடந்தது.  இக்கோயிலில் யாகசாலையில் புனிதநீர் நிரம்பிய குடங்களை வைத்து சீனிவாசராகவ சாஸ்திரி, பிரசந்த பட்டர் வேதம் முழங்க சனீஸ்வரலிங்கத்திற்கு அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோயில் அறங்காவலர், விழாக்குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !