மகாலட்சுமி கோவிலில் சக்கரத்தாழ்வார் பிரதிஷ்டை
ADDED :4227 days ago
விழுப்புரம்,: விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் மகாலட்சுமி குபேரர் கோவிலில் நாளை (13ம் தேதி) சக்கரத்தாழ்வார் பிரதிஷ்டை நடக்கிறது.விழாவையொட்டி இன்று (12ம் தேதி) மாலை 5:00 மணிக்கு பகவத் அனுக்ரகம், மகா சங்கல்பம், வாஸ்துசாந்தி, திருமஞ்சனம், பூர்ணாஹூதி நடக்கிறது. நாளை (13ம் தேதி) காலை 6:00 மணிக்கு கோ பூஜை, புண்யாகவகனம், சுதர்சன மூலமந்திரம் நடக்கிறது.பின்னர் 9:00 மணிக்கு மகா பூர்ணாஹூதி, யாத்ராதானம், சக்கரத்தாழ்வார் பிரதிஷ்டை நடக்கிறது. வரும் 16ம் தேதி மாலை 5:00 மணிக்கு சீனுவாச பெருமாள் திருக்கல்யாணம் நடக்கிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை அப்பகுதி மக்கள் செய்து வருகின்றனர்.