காரிமங்கலம் மலைக்கோவிலில் பங்குனி உத்திர விழா துவக்கம்!
காரிமங்கலம்: காரிமங்கலம் மலைக்கோவிலில், பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. காரிமங்கலம் ஸ்ரீ அபிஜ குஜாம்பாள் சமேத அருணேஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில், பங்குனி உத்திர திருவிழா ஆண்டுதோறும் நடந்து வருகிறது. நேற்று காலை, 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன், உத்திரபெருவிழா துவங்கியது. இரவு, 7 மணிக்கு, ஸ்வாமி திருவீதி உலா நடந்தது. இன்று காலை, ஸ்வாமி சிறப்பு அபிஷேகம், அலங்காரமும், மதியம், 12 மணிக்கு இந்தியன் ஆயில் டீலர் சண்முகம் குடும்பத்தின் சார்பில், பக்தர்களுக்கு அன்னதானமும், இரவு, 7 மணிக்கு ஸ்வாமி திருவீதி உலாவும் நடக்கிறது. நாளை, 13ம் தேதி ஸ்வாமிக்கு, சிறப்பு அபிஷேகமும், அலங்காரம், மதியம், 12 மணிக்கு எச்சனம்பட்டி ராமன் மற்றும் குழுவினர் சார்பில் அன்னதானமும், இரவு, 7 மணிக்கு ஸ்வாமி திருவீதி உலாவும், 14ம் தேதி ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகமும், மதியம், 12 மணிக்கு, தொழிலதிபர் ஸ்ரீ சிவம் குடும்பத்தினர் சார்பில், பக்தர்களுக்கு அன்னதானமும், இரவு, 7 மணிக்கு, ஸ்வாமி திருவீதி உலாவும் நடக்கிறது. வரும், 15ம் தேதி காலை, ஸ்வாமி சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடக்கிறது. இரவு, 7 மணிக்கு திருவீதி உலா நடக்கிறது. 16ம் தேதி, பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, காலை, 7 மணிக்கு, ஸ்வாமி சிறப்பு அபிஷேகம், அலங்காரமும், 10 மணிக்கு ஸ்வாமி தேர் ஏறும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இரவு, 7 மணிக்கு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேர் பவனி வரும் நிகழ்ச்சியை, எம்.எல்.ஏ., அன்பழகன் துவக்கி வைக்கிறார். 17ம் தேதி காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரமும், கொடி இறக்கமும் நடக்கிறது. விழாக்குழு தலைவர் எம்.எல்.ஏ., அன்பழகன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர்கள் செந்தில்குமார், சீனிவாசன், குருக்கள் புருஷோத்தன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.