உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சவுடேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

சவுடேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

கோத்தகிரி: கோத்தகிரியில் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், இன்று கும்பாபிஷேகம் நடப்பதையொட்டி யாகசாலை பூஜை நடந்தது. கோத்தகிரியில் உள்ள ராமலிங்க சவுடேஸ்வரி கோவில் கட்டும் பணி கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக நடந்துவந்தது. இந்த பணிகள் முடிவடைந்த நிலையில், இன்று (12ம் தேதி) மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இவ்விழாவுக்காக, நேற்று முன்தினம் மங்கள இசையுடன் தீர்த்தக்குடம் முளைப்பாரி திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, விநாயகர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு ஹோமம், பூர்ணாஹூதி, கோமாதா பூஜை நடந்தது.நேற்று 11ம் தேதி காலை 8:00 மணிமுதல்தீபாராதனை நிகழ்ச்சியுடன் இரண்டாம் கால யாகம் நடந்தது. தொடர்ந்து, கோபுரத்துக்கு தானியங்கள் நிரப்புதல், கலசம் வைத்தல், கண்திறப்பு நிகழ்ச்சியை அடுத்து தெய்வத்திருமேனிகளை உறங்க வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. மாலை 5:00 மணிக்கு மங்கள இசையுடன் மூன்றாம் கால யாகம், யந்திரஸ்தாபனம், பிம்ப ஸ்தாபனம் மற்றும் அஷ்டபந்தனம் நடந்தது.யாகசாலை பூஜையில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. முக்கியத்திருவிழா நாளான இன்று காலை 10.30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !