உச்சி மாகாளியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவ விழா!
பொள்ளாச்சி: பொள்ளாச்சி ஜமீன் சமத்தூர் உச்சி மாகாளியம்மன் கோவிலில், திருக்கல்யாண உற்சவ விழா நடைபெற்று வருகிறது. பொள்ளாச்சி ஜமீன் சமத்தூர் உச்சி மாகாளியம்மன் கோவிலில், திருக்கல்யாண உற்சவ விழா கடந்த 4ம் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து, பிற புண்ணிய ஸ்தலங்களிலிருந்து கொண்டு வரப்படும் தீர்த்தங்களை பட்டத்தரசி அம்மன் கோவிலில் இருந்து அழைத்து வருதல் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, நேற்று முன்தினம் சக்தி அழைத்து கும்பஸ்தாபனம் செய்தல் நிகழ்ச்சியும்; நேற்று இரவு பட்டத்தரசி அம்மன் கோவிலிலிருந்து பக்தர்கள் பூவோடு கொண்டு வருதல் நிகழ்ச்சியும் இடம்பெற்றன. திருவிழாவையொட்டி,100, 50, 20, 500 ரூபாய் என மொத்தம் 25 ஆயிரம் ரூபாயால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தனர். இன்று காலை 5:00 மணிக்கு அம்மன் திருக்கல்யாணம், காலை 7:00 மணிக்கு மாவிளக்கு எடுத்தல், காலை 9:00 மணிக்கு கும்பம் விடுதல் நிகழ்ச்சியும்; 13ம் தேதி மாலை 6:00 மணிக்கு மகா முனி பூஜை, இரவு 12:00 மணிக்கு அஷ்டதிக்கு பலி பூஜை, 14ம் தேதி காலை 7:00 மணிக்கு அம்மன் மஞ்சல் நீராடல் உலா, இரவு 7:00 மணிக்கு அபிேஷக ஆராதனையும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.