வடாரண்யேஸ்வரர் கோவிலில் பழமையான ரதம் புதுப்பிக்கும் பணி!
ADDED :4270 days ago
குத்தாலம்: திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் கோ- ரதம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இக்கோயிலில் கோ-ரதம் எனும் பழமையான ரதம் உள்ளது. கடந்த 1951-ம் ஆண்டிற்கு பிறகு இந்த ரதத்தில் சாமி புறப்பாடு நடைபெறவில்லை. தற்போது கோரதம் புறப்பாட்டை மீண்டும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு கோரதம் புதுப்பிக்கும் திருப்பணி தொடங்கப்பட்டுள்ளது. பழமையான கோரதத்திற்கு தேக்கு மரத்தில் அழகிய வேலைபாடுகளுடன் சுமார் 25 அடி உயரத்திலும், 10 அடி அகலத்திலும் செய்யப்பட்டுள்ளது. மேலும், ரதத்தின் பழமை மாறாமல் அதனை அழகுப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. வரும் பங்குனி உத்திர விழாவில் கோ-ரதத்தில் சாமி புறப்பாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.