பட்டத்துவிநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா!
தாண்டிக்குடி: தாண்டிக்குடியில் மகா பட்டத்து விநாயகர் கோயில் மற்றும் சிவன் , நவக்கிரக, பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா நடந்தது.யாகசாலை பூஜையில் மகாகணபதி ஹோமம், சுதர்ஷன, நவசக்தி, நவக்கிரக ஹோமங்கள், கோ பூஜை மகா பூர்ணா ஹூதி பூஜைகள் நடந்தது. கோபுர கலசங்களுக்கு புனித நீர் தெளித்து கும்பாபிஷேகம் நடந்தது. யாகசாலை பூஜைகள் மதுரை பரமேஸ்வர பட்டர் தலைமையில் நடந்தது. பட்டத்து விநாயகருக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தன. பட்டக்காரர் மங்களகாந்தி, கிராம கோயில் மேலாளார் இளங்கோவன், பட்டத்து விநாயகர் நற்பணி மன்ற உறுப்பினர்கள், தலைவர் ராஜேந்திரன், துணைத்தலைவர் ரவிச்சந்திரன், தாண்டிக்குடி ஊராட்சி தலைவர் மரகதம், ஒன்றிய கவுன்சிலர் தவசி, பள்ளங்கி முன்னாள் பேரவை செயலர் சிவாஜி, தி.முக., ஊராட்சி கிளை செயலர் மகேஷ், தி.மு.க., மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளார் தமிழரசி மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை நிர்வாகத்தினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.