உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்வ முத்து மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

செல்வ முத்து மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

திருக்கானூர்: மண்ணாடிப்பட்டு சின்னபேட் செல்வ முத்து மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.திருக்கானூர் அடுத்த மண்ணாடிப்பட்டு சின்னபேட் கிராமத்தில்  செல்வ முத்து மாரியம்மன் கோயிலில் கடந்த 10-ம் தேதி கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேகம் துவங்கியது.தொடர்ந்து 11-ம் தேதி காலை 10. 30 மணிக்கு மூலவர் கரிக்கோல நிகழ்ச்சியும், மாலை 6.00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜை நடந்தது.
முக்கிய விழாவாக கடந்த 12-ம் தேதி காலை 8.00 மணிக்கு நான்காம்  கால யாகசாலை பூஜையும், 10.00 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.








தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !