அங்காளம்மன் கோவில் மயான கொள்ளை விழா
ADDED :4226 days ago
விழுப்புரம்: கருங்காலிபட்டு கிராமத்தில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 12ம் ஆண்டு மயான கொள்ளை விழா நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை 7:30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபி ஷேகம், ஆராதனை, 10:00 மணிக்கு பூதகணம், காட் டேரி அம்மன், வீரபத் திரன் வீதியுலா நடந்தது. 11 மணிக்கு அங்காளம் மன் குறத்தி வேடமணிந்து குறி சொல்லும் வீதியுலா, பகல் 12:00க்கு கோவில் திடலுக்கு சென்று வல்லாளன்கோட்டை இடித்து மயானத்திற்கு சுவாமி புறப்படும் நிகழ்ச்சி நடந்தது.மாலை 3:00 மணிக்கு அம்மன் வேடமணிந்த பெருமாள் கத்தி மேல் நின்று கையில் அக்னி சட்டி ஏந்தி ஆலயம் சுற்றி வருதல், இரவு 9:00 மணிக்கு அம்மன் முத்துபல்லக்கு வீதியுலா நடந்தது. பக்தர்களுக்கு ருசி மோர் வழங்கப்பட்டது.