உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் திருவிழா: தலையில் தேங்காய் உடைத்த பக்தர்கள்!

மாரியம்மன் திருவிழா: தலையில் தேங்காய் உடைத்த பக்தர்கள்!

இடைப்பாடி: இடைப்பாடி அருகே கவுண்டம்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த மாதம், 28ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஸ்வாமி ஊர்வலம், நேற்று நடந்தது. பக்தர்கள் அலகு குத்தி ஆம்னி கார் இழுத்து வந்தும், எலுமிச்சை பழம் அலகு குத்தி வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், மாவிளக்கு எடுத்து வந்தனர். ஸ்வாமி ஊர்வலம் சென்றபோது, ஸ்வாமி முன்பு உட்கார்ந்த பக்தர்களின் தலையில் தேங்காய் உடைக்கப்பட்டது. நேற்று மாலை, மாரியம்மனுக்கு, பொங்கல் வைத்து, ஆடு, கோழிகள் பலியிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !