மந்தக்காட்டு கருப்பராயன் கோவில் குண்டம் விழா
ADDED :4227 days ago
பொள்ளாச்சி: பொள்ளச்சியை அடுத்த தேம்பாடி களிபாளையத்தில் அமைந்துள்ள மந்தக்காட்டு கருப்பராயன் கோயில் குண்டம் திருவிழா இன்று நடைபெறுகிறது.
கடந்த 7-ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. நேற்று பெரிய கருப்பராயன் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து இன்ற காலை 7.00 மணிக்கு கணபதி ஹோமம், புண்ணியவாசனை, 8.00 மணிக்கு மேல் குண்டம் திறப்பு, 9.00 மணிக்கு மேல் பூ வளர்த்தல், 12.00 மணிக்கு பள்ளைய பூஜை, மதியம் 12.30 மணிக்கு கங்கை செல்லுதல் ஆகியவை நடக்கிறது. அடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் மாலை 4 மணிக்கு நடக்கிறது. 6.00 மணிக்கு மேல் அக்னி தணிப்பு, அபிஷேக பூஜைகள் மற்றும் பிரசாதம் வழங்கப்படும்.