உச்சிமாகாளியம்மன் கோவிலில் திருக்கல்யாணம்!
ADDED :4228 days ago
மடத்துக்குளம்: மடத்துக்குளம் அருகேயுள்ள உச்சிமாகாளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் கோடை திருவிழா விசேஷங்கள் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு அம்மன் திருக்கல்யாணம் மற்றும் பூவோடு எடுத்தல் நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம் அமராவதி ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து வந்து, அம்மனுக்கு அபிேஷகம் செய்தனர். மாலை 6.00 மணிக்கு 120 பூவோடுகள் சாலரப்பட்டி பகுதியில் எடுக்கப்பட்டு அமராவதி கூட்டுறவு வடிப்பாலைக்கு அருகில் உள்ள உச்சி மாகாளியம்மன் கோவிலுக்கு கொண்டு வந்து வழிபாடு செய்யப்பட்டது. இரவு குதிரை வாகனங்கள் ஊருக்குள் சென்றன. அனைவரும் வழிபாடு செய்தனர். விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிேஷக,அலங்காரங்கள் செய்து வழிபாடு நடந்தது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் பிரசாதம்,அன்னதானம் வழங்கப்பட்டது.