உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வால்பாறை முத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை!

வால்பாறை முத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை!

வால்பாறை: வால்பாறை அண்ணாநகர் முத்துமாரியம்மன் கோவிலில், முதல் வெள்ளிக்கிழமை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வால்பாறை நகரின் மத்தியில் அமைந்துள்ளது அண்ணாநகர். இங்குள்ள முத்துமாரியம்மன் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. ஐந்து ஆண்டுகள் கோவில் திருப்பணி நிறைவு பெற்ற நிலையில் கடந்த 12 ம்தேதி மகாகும்பாபிேஷகம் நடந்தது.இந்த கோவிலில் அம்மன் கிழக்கு முகமாக அமர்ந்த நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வலது புறம் விநாயகரும், இடது புறம் முருகனும், கோவிலின் முன்புறம் காவல்தெய்வமாக முனீஸ்வருக்கும் தனித்தனி கோவில் உள்ளது.கோவில் கும்பாபிேஷகம் நிறைவடைந்த முதல் வெள்ளிக்கிழமை (நேற்று) என்பதால் காலை 5.00 மணிக்கு அம்மனுக்கு கணபதி பூஜையும், காலை 6.00 மணிக்கு அபிேஷக பூஜையும் நடந்தது. தொடர்ந்து காலை 9.00 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !