வள்ளலார் மன்றத்தில் மாசி மாத பூச விழா!
ADDED :4259 days ago
சங்கராபுரம்: சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் மாசி மாத பூச விழா நடந்தது.மன்ற தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். மன்ற நிர்வாகிகள் நாராயணன், வைத்திலிங்கம் முன்னிலை வகித்தனர். மன்ற பொருளாளர் முத்துகருப்பன் வரவேற்றார். மன்ற பூசகர்கள் தமிழ்மணி அடிகள், சிவஞான அடிகள் முன்னிலையில் அகவல் படித்து உலக அமைதிக்காக பிரார்த்திக்கப்பட்டது. சிதம்பரத்தில் நடந்த பன்னிரு தமிழ்வேத வெள்ளிவிழா மாநாட்டில் விருது பெற்ற சின்னதம்பி, சங்கராபுரம் அரிமா சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள விஜயகுமாருக்கு மன்றம் சார்பில் மன்ற பொருளாளர் முத்து கருப்பன் பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.அரிமா மாவட்ட தலைவர் ஜனனி மகாலிங்கம், அல்லியம்மாள், வடசிறுவளர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். சிறப்பு ஜோதி தரிசனத்திற்கு பின் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.