சீர்காழி கோமளாம்பிகை அம்மன் கோயில் விழா!
ADDED :4261 days ago
சீர்காழி: சீர்காழி கோமளாம்பிகை அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது. காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் பால்காவடி, அலகு காவடி எடுத்து வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மாலையில் கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.