உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுசீந்திரம் கோயிலில் மாசி திருக்கல்யாண விழா

சுசீந்திரம் கோயிலில் மாசி திருக்கல்யாண விழா

நாகர்கோவில் :  சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் மாசியில் தாணுமாலைய சுவாமிக்கும் அறம்வளர்த்த நாயகிக்கும் திருக்கல்யாண விழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு திருக்கல்யாண விழா துவங்கியது. விழாவையொட்டி காலையில்
பறக்கையில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் அறம் வளர்த்தி நாயகி அம்மன் ஆசிரமத்தில்உள்ள விநாயகர் கோயிலுக்கு எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து மாலையில் அலங்கரிக்கப்பட்டபல்லக்கில் அம்மன் சுசீந்திரம் கோயிலுக்கு எழுந்தருளினார்.
ரிஷப வாகனத்தில் சிவனும், கருட வாகனத்தில் பெருமாளும் எழுந்தருளி
 இரவு 9 மணிக்கு அலங்கார மண்டபத்தில் தாணுமாலைய சுவாமிக்கு அறம் வளர்த்த நாயகிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. .



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !