ஆத்தூர் ஸ்ரீ சோமசுந்தரி அம்மன் கோயில் நாளை தேரோட்டம்
ஆறுமுகனேரி : ஆத்தூர் ஸ்ரீ சோமசுந்தரி அம்மன் உடனாய ஸ்ரீ சோமநாதசுவாமி திருக்கோயில்பங்குனி திருவிழாவின் 10-ஆம் திருவிழாவையொட்டி, நாளை தேரோட்டம் நடக்கிறது.இக்கோயிலில், பங்குனி திருவிழா மார்ச் 7--ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள்நடைபெறும் இத்திருவிழாவில் தினசரி காலை மற்றும் மாலை வேளைகளில், சுவாமி, அம்மனுக்குசிறப்பு அபிஷேகங்களும் மற்றும் பல்வேறு வாகனங்களில் பக்தர்களுக்கு காட்சி அளித்து திருவீதிஉலாவும் நடைபெற்றன.
7-ஆம் திருவிழாவான வியாழக்கிழமை, அதிகாலை 4 மணிக்கு ஸ்ரீ நடராஜருக்கு காப்புக்
கட்டுதலும், 5 மணிக்கு உருகு சட்ட சேவையும், பின்னர் பகலில் சிறப்பு அபிஷேகமும், இரவு
சுவாமி சிவப்பு சாத்தி ருத்ர வழிபாடும், அதன் பின் பக்தர்களுக்கு காட்சியளித்து நான்கு ரத
வீதிகள் வழியாக பவனியும் நடைபெற்றது.
8-ஆம் திருவிழாவான, வெள்ளிக்கிழமை அதிகாலை, சுவாமி வெள்ளை சாத்தி, பிரம்ம உருவ
வழிபாடும், அதன்பின் திருவீதி உலாவும் நடைபெற்றது. 9-ஆம் திருவிழாவான, சனிக்கிழமை
காலை, சுவாமி அம்பாள் திருவீதி உலாவும், பின்னர் சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரத்
தீபாராதனையும் நடைபெறும். விழா முக்கிய நாளான நாளை அதிகாலை 5.30-க்கு திருத்தேர்
எழுந்தருளலும், காலை 8.30-க்கு தேரோட்டமும் நடைபெறுகிறது.