உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரிவரதராஜ பெருமாள் கோவில் 18--ல் தேரோட்டம்

கரிவரதராஜ பெருமாள் கோவில் 18--ல் தேரோட்டம்

பெ.நா.பாளையம்: கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம்-குப்பிச்சிபாளையம் சாலையில் கரிவரதராஜ பெருமாள் கோவில் உள்ளது.கோவிலில் 9-வது ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத் துடன் தொடங் கியது. இதைத் தொடர்ந்து குழந்தைகள் மற்றும் பெண்கள் கும்மி அடித்த படி முன்னே செல்ல சுவாமி திருவீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
17-ம் தேதி திருக்கல் யாண உற்சவம், 18--ம் தேதி தேரோட் டம், 19--ம் தேதி பரிவேட்டை, 20-ம்
தேதி தெப்பத்தேர், 21--ம்  தேதி தீர்த்த வாரி ஆகிய நிகழ்ச்சிகள் நடை பெற உள்ளது.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !