காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் வெள்ளி மாவடி உற்சவம்!
ADDED :4593 days ago
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், நேற்று முன்தினம் இரவு, மாவடி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவம், நடந்து வருகிறது. இதில், ஒன்பதாம் நாள் திருவிழாவான நேற்று முன்தினம் இரவு, மாவடி சேவை உற்சவம் நடந்தது. இதில் ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர், இரவு 10:00 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட வெள்ளி மாவடியில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின், 10:30 மணிக்கு கோவிலில் இருந்து வெள்ளி மாவடி புறப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட வெள்ளி மாவடியில் ராஜவீதிகளில் உலா வந்த, ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதரை பக்தர்கள் தரிசனம் செய்தனர். நள்ளிரவு 12:00 மணிக்கு, வெள்ளி மாவடி, நிலைக்கு வந்து சேர்ந்தது.