உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்கால் கயிலாசநாதர் கோவிலுக்கு புதிய வெள்ளி பல்லக்கு!

காரைக்கால் கயிலாசநாதர் கோவிலுக்கு புதிய வெள்ளி பல்லக்கு!

காரைக்கால்: காரைக்கால் கயிலாசநாத சுவாமி கோவிலுக்கு, 4 லட்சம் மதிப்பிலான புதிய வெள்ளி பல்லக்கு அர்ப்பணிக்கப்பட்டது. காரைக்கால் மாவட்டத்தில் கயிலாச நாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் தினமும் எம்பெருமான் பள்ளியறைக்கு எழுந்தருளும் பல்லக்கு 4 லட்சம் ரூபாயில் புதிதாக வெள்ளி பல்லக்கு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய பல்லக்கு சுவாமிக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சியையொட்டி, காலை 9 மணிக்கு ஹோமமும், வெள்ளி பல்லக்கில் சுவாமி புறப்பாடும் நடந்தது. இரவு 8 மணிக்கு சுவாமி அம்பாள் அபிஷேகமும், வெள்ளி பல்லக்கில் சுவாமி பள்ளியறைக்கு அழைத்து செல்லப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அர்த்தசாம வழிபாட்டு மன்றத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !