உருவாட்டி பெரியநாயகி அம்மன் கோவில் தேரோட்டம்!
ADDED :4261 days ago
காளையார்கோவில் : உருவாட்டி பெரியநாயகி அம்மன் கோவில் பங்குனி உற்சவ திருவிழா, மார்ச் 8ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்தார். முக்கிய நிகழ்வாக, மார்ச் 15 அன்று மயில், பறவை காவடிகளும், தீச்சட்டி எடுத்தும், பூக்குழி இறங்கியும் பக்தர்கள் நேர்த்தி செலுத்தினர். மார்ச் 16 அன்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.பின் தேரில் எழுந்தருளினார். காலை 6 மணிக்கு நாட்டார்கள் மற்றும் பக்தர்களும் தேர் வடத்தை பிடித்து, தேரோட்டம் நடந்தது. அதை தொடர்ந்து, மாலையில் மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. இன்று அம்மன் பூப்பல்லக்கில் வலம் வருவார். அம்மன் தீர்த்த வாரி உற்சவத்துடன் விழா, நிறைவு பெறும். விழா ஏற்பாட்டை சிவகங்கை தேவஸ்தானம், உருவாட்டி நாட்டார்கள் மற்றும் கிராமத்தினர் செய்தனர்.