கம்மாபுரம் கோவிலில் பங்குனிஉத்திர விழா
ADDED :4261 days ago
கம்மாபுரம்: கம்மாபுரம் சுப்ரமணியர் கோவில் பங்குனி உத்திர திருவிழா நடந்தது.கம்மாபுரம் வடக்கு தெரு சுப்ரமணியர் கோவில்,பங்குனிஉத்திரவிழா கடந்த 7ம் தேதி துவங்கியது.தினசரி, விநாயகர், வள்ளி, தெய்வாணை, சுப்ரமணியர் சுவாமிகளுக்கு அபிஷேக,ஆராதனை, இரவு8 மணியளவில் துதிப் பாடல் பஜனை நடந்தது.நேற்று 16ம் தேதி காலை 6 மணிக்கு மூலவருக்குஅபிஷேக ஆராதனை, காலை 9 மணியளவில் வேல்சுமத்தல் நிகழ்ச்சி, மேலக்குளத்திலிருந்து பக்தர்கள்செடலணிந்து, காவடி ஏந்தி, பால்குடம் சுமந்து ஊர்வலமாக வந்து, கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகஆராதனை செய்தனர்.பகல் 12:00 மணியளவில் வள்ளி தெய்வாணைசமேத சுப்ரமணியர் புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தார்.