சித்தர் கோவிலில் மண்டல பூர்த்தி விழா
ADDED :4261 days ago
புதுச்சேரி: ராஜகோபால் சித்தர் கோவிலில் மண்டல அபிஷேக பூர்த்தி விழா நடந்தது.
நாவற்குளம் ஏர்போர்ட் பின்புறம் உள்ள சித்தர் ராஜகோபால் சுவாமி கோவிலில் கடந்த ஜனவரி 26-ம் தேதி லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.இதன் 48-வது நாள் மண்டல அபிஷேக பூர்த்தி விழா நேற்று நடந்தது. காலை 7.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை அதைத்தொடர்ந்து பஞ்ச சுத்த ஹோமம், ருத்ர ஹோமம் நடந்தது. காலை 10.30 மணிக்கு மகா பூர்ணஹுதியும் நடந்தது.