உலகின் மிக உயரமான கோவில்: அடிக்கல் நாட்டு விழா!
பிருந்தாவன்: உலகிலேயே மிக உயரமான கோவிலுக்கான அடிக்கல் நாட்டு விழா, உ.பி.,யில், நேற்று நடந்தது. உத்தர பிரதேசத்தில், முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி, ஆட்சியில் உள்ளது. இங்குள்ள பிருந்தாவனில், உலகின் மிகப் பெரிய கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, நேற்று நடந்தது. இதில், மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் மற்றும் காங்., மத்திய அமைச்சர் ராஜீவ் சுக்லா ஆகியோர் கலந்து கொண்டனர். "ஹரே கிருஷ்ணா இயக்கத்தின் சார்பில், இந்த கோவில் கட்டப்படுகிறது. அகிலேஷ் பேசியதாவது:இந்த கோவில், 300 கோடி ரூபாய் செலவில் கட்டப்படவுள்ளது. 213 மீட்டர் உயரம் உடைய, "சந்திரோதயா மந்திர் என்னும், இந்த கோவில், இன்னும் ஐந்து ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும். கிருஷ்ணர் வாழ்ந்த இடத்தில், அவருக்கான கோவில் அமைவதில் நாம் பெருமை அடைய வேண்டும். இந்த கோவில், 70 அடுக்குகளை உடையதாக இருக்கும். இந்த கோவிலின் ஏழாவது தளத்தில், தொலைநோக்கி அமைக்கப்படும். இதிலிருந்து பார்த்தால், கிருஷ்ண ஜென்ம பூமியும், தாஜ்மகாலும் தெரியும்.இவ்வாறு அவர் பேசினார்.