உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழை வேண்டி 108 பால்குட ஊர்வலம்!

மழை வேண்டி 108 பால்குட ஊர்வலம்!

தளவாய்புரம்: கிருஷ்ணாபுரம் நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட, பத்திரகாளியம்மன், மாரியம்மன்கோயிலில், மழை வேண்டி, நேற்று, 108 பால்குடம் எடுக்கும் விழா நடந்தது. முன்னதாக, நடராஜபட்டர்,சரவண பட்டர், கோயிலில், 11 வகையான யாகசாலை பூஜைகள் செய்தனர். பின்னர், 108 பக்தர்கள், பால்குடம் எடுத்து, ஊரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து, மீண்டும் கோயிலை அடைந்தனர். அம்மனுக்கு பால் மற்றும் பல்வேறு அபிஷேகங்கள் நடந்தது. விழா ஏற்பாட்டை உறவின்முறை தலைவர் ராமசாமி,தர்மகர்த்தா ராமகிருஷ்ணன், கணக்கர் முத்தையா, நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !