புதுக்குப்பம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :4263 days ago
கிருமாம்பாக்கம்: பூரணாங்குப்பம் புதுக்குப்பம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 28ம் தேதி நடக்கிறது. கும்பாபிஷேக விழா வரும் 26ம் தேதி துவங்குகிறது. 27ம் தேதி இரண்டாம் கால பூஜை, மாலை மூன்றாம் கால பூஜை நடக்கிறது. 28ம் தேதி காப்பு கட்டுதல், மஹா பூர்ணாஹூதியுடன், காலை 9:00 மணிக்கு கடம் புறப்பாடும் தொடர்ந்து கும்பாபிஷேகமும் நடக்கிறது.