உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நொச்சூர் வெங்கடராமன் ஆன்மிக சொற்பொழிவு

நொச்சூர் வெங்கடராமன் ஆன்மிக சொற்பொழிவு

புதுச்சேரி: நான் யார் என்ற விசாரணையை நமக்குள்ளே தேடும்போது, படிப்படியாக ஆத்ம தெளிவு கிடைக்கும் என, நொச்சூர் வெங்கடராமன் ஆன்மிக சொற்பொழிவாற்றினார். லாஸ்பேட்டை விவேகானந்தா கல்வி வளாகத்தில் ஆத்மஞானம் என்ற ஆன்மிக சிறப்பு உபன்யாசம்  நேற்று நடத்தது.ஆசார்ய பிரம்மஸ்ரீ நொச்சூர் வெங்கடராமன் சொற்பொழிவாற்றினார். அப்போது, நான் யார் என்ற விசாரணையை நமக்குள்ளே கேள்வி கேட்டு, அந்தக் கேள்விக்கான நிலையை நமக்குள்ளே தேடும்போது, படிப்படியாக ஆத்ம தெளிவு கிடைக்கும். அத்துடன், மன சஞ்சலமும் நீங்கி நம்முடைய புத்தி தெளிவடையும். இதனால், கலக்கம் இல்லாமல் தெளிவான சிந்தனையுடன் வாழ்வில் செயல்பட முடியும். குறிப்பாக, நம்முடைய தன்மை அறிந்தால், மன தெளிவு பெறலாம். ஞானிகளை துாரத்தில் இருந்து பார்க்கும்போது ஒன்றும் தெரியாது. அவர்களை அருகில் இருந்து கவனிக்கும்போது பல விஷயங்கள் புலப்படும். ஞானியின் ஒவ்வொரு செயலுக்கான காரணமும் தெளிவாக விளங்கும் என விரிவாக பொதுமக்களுக்கு எடுத்துக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !