உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்!

தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்!

தாடிக்கொம்பு: தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் பங்குனி மாத திருக்கல்யாணம் நடந்தது. நேற்று மாலை 6 மணிக்கு பெருமாள் சுவாமி சன்னதியில் இருந்து புறப்பட்டார். சவுந்திரவள்ளி தாயார் சுவாமி புறப்பாடும் நடந்தது. ஆண்டாள் சன்னதி முன்பு அமைக்கப்பட்ட அலங்கார பந்தலில் திருமணம் நடந்தது. நிர்வாகம் சார்பில் செயல் அலுவலர் சக்திவேல் ஏற்பாடுகள் செய்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு மாங்கல்ய கயிறு உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !