உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பண்ணாரியில் குண்டம்: சிறப்பு பஸ் இயக்கம்!

பண்ணாரியில் குண்டம்: சிறப்பு பஸ் இயக்கம்!

திருப்பூர்: ஈரோடு மாவட்டம், பண்ணாரியில் குண்டம் திருவிழா நடப்பதால், திருப்பூரில் இருந்து 30 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பிரசித்தி பெற்ற பண்ணாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா, கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்றிரவு அம்மன் அழைப்பு, நாளை (18ம் தேதி) அதிகாலை 4.00 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி துவங்குகிறது. வரும் 24ல் மறு பூஜையுடன் விழா நிறைவடைகிறது. குண்டம் திருவிழாவை முன்னிட்டு, திருப்பூர், காங்கயம், பல்லடம், உடுமலை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பண்ணாரிக்கு பக்தர்கள் வருவர் என்பதால், திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து, 30 பஸ்கள் இயக்க, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். அவர்கள் கூறுகையில், "திருப்பூரில் இருந்து அவிநாசி, புளியம் பட்டி, சத்தியமங்கலம் வழியாக பண்ணாரிக்கு இன்று காலை முதல் பஸ்கள் இயக்கப்படும். மொத்தம் 30 பஸ்கள் இயக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. வழக்கமான பயண கட்டணமே வசூலிக்கப்படும். சில பஸ்கள், புளியம்பட்டி, பவானிசாகர், ராஜன் நகர் வழியாக பண்ணாரிக்கு இயக்கப்படும். புதன்கிழமை காலை வரை சிறப்பு பஸ்கள் இயங்கும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !