உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடி முத்தாலம்மன் கோயில் மின் தீப தேரோட்டம் கோலாகலம்!

பரமக்குடி முத்தாலம்மன் கோயில் மின் தீப தேரோட்டம் கோலாகலம்!

பரமக்குடி : பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனி விழா, மார்ச் 9 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை, நூற்றுக்கணக்கான பக்தர்கள் அக்னிச் சட்டி ஏந்தியும், வேல் குத்தியும் தங்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு 7.45 மணிக்கு அம்மன் சர்வ அலங்காரத்துடன், மேள, தாளங்கள் முழங்க, தீவெட்டி வெளிச்சத்துடன் மின்சார தீப தேரில் எழுந்தருளினார். பின்னர் நான்கு மாட வீதிகளில் பக்தர்கள் "சக்தி கோஷத்துடன் தேரினை வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து இரவு 2 மணிக்கு அம்மன் "கள்ளர் திருக்கோலத்துடன் புஷ்பபல்லக்கில் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று கொடியிறக்கமும், நாளை(மார்ச் 19) அதிகாலை 4 மணி முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் பால்குட விழாவும், 11 மணிக்கு பல்வேறு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு புஷ்பபல்லக்கில் அம்மன் சயன கோலத்தில் வீதியுலாவுடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள், ஆயிர வைசிய சபையினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !